சென்னை ரயில்களில் வினியோகிக்கும் உணவுப் பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில் பயணியருக்கான உணவு தயாரிப்பு மற்றும் வினியோகப் பணியை, இந்தியன் ரயில்வே உணவு மற்றும்
சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., மேற்கொண்டு வருகிறது. தற்போது, விரைவு ரயில்களில் வினியோகம் செய்யப்படும் இட்லி, சாதம் வகை உள்ளிட்ட...
more... 70 உணவுப்
பொருட்களின் விலை, 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது இருப்பினும், இது குறித்து எந்த அறிவிப்பையும்.
ஐ.ஆர்.சி.டி.சி., வெளியிடவில்லை இதனால், பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், உணவு வினியோகிப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய விலை பட்டியல்படி, இரண்டு இட்லி - 20 ரூபாய். இரண்டு சப்பாத்தி - 20, ஒரு வடை 15 இரண்டு சமோசா- 20, ரவா கோதுமை, சேமியா உப்புமா தலா, 30, மசாலா தோசை 50, புளி, எலுமிச்சை, தயிர், தேங்காய் சாதம் தலா 50 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அசைவ உணவு வகை; 10 சதவீதத்திற்கும் மேலாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இனிப்பு வகையில் ஜிலேபி 20. குலோப் ஜாமூன் 20: கேசரி 20 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்டாண்டர்டு மற்றும் 'ஜனதா சாப்பாட்டில், எந்த விலை மாற்றமும் செய்யவில்லை என,
ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
please wait...Translate to EnglishChennai Railways' food items have been priced higher.
Food preparation and distribution for train passengers is being done by Indian Railways' catering department, IRCTC, along with Southern Railway. Currently, in fast trains, food items like idli, sambar, with 70 varieties are being sold at higher prices, up to 7 times. This price hike has been in effect since the 26th of this month, but no official notification has been issued regarding this matter. As a result, passengers are dissatisfied.
Furthermore, there have been incidents of protest among the food vendors.
According to the new price list, two idlis cost 20 rupees, two chapatis cost 20 rupees, one vada costs 15 rupees, two samosas cost 20 rupees, Rava Kothu, Semiya Upma, and Curd Rice each cost 30 rupees, and Masala Dosa costs 50 rupees. This decision has been taken and implemented.
The price of vegetarian food items has been increased by more than 10 times. In the sweet category, Jalebi costs 20 rupees. Gula...