விழுப்புரம் - தாம்பரம் மார்க்கத்தில் யூனிட் ரயில் சேவை துவங்கியது
விழுப்புரம் : விழுப்புரம் - தாம்பரம் மார்க்கத்தில் யூனிட் ரயில் சேவை துவங்கியுள்ளதை யொட்டி, பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.விழுப்புரம் - தாம்பரம் மார்க்கத்திற்கு பாசஞ்சர் ரயில் தினமும் அதிகாலை 5:30 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தாம்பரத்திற்கு 8:30 மணிக்கு சென்றடைகிறது. அதேபோன்று, தாம்பரத்தில் இருந்து மாலை 6:10 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரத்திற்கு இரவு 9:20 மணிக்கு வந்தடைகிறது. இந்த பாசஞ்சர் ரயிலை யூனிட் ரயிலாக மாற்றி இயக்க வேண்டுமென, பயணிகள் நீண்ட காலமாக, தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் - தாம்பரம் மார்க்கத்தில் அதிநவீன வசதிகளோடு, யூனிட் ரயில் சேவை நேற்று முதல் துவங்கியது.
8 பெட்டிகளோடு செல்லும் இந்த ரயில், புறப்பட்டு சில நிமிடங்களில் மணிக்கு 100...
more... கி.மீ., வேகத்தை அதிகரிக்கும் தன்மையுடையது. இதில் பயணிகளுக்கு குஷன் சீட்டுகளின் இருக்கைகள், மொபைலுக்கான சார்ஜர் போர்டு வசதி என நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.பயணிகள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் பயணிக்கும் வசதிகள் இந்த ரயிலில் உள்ளதால், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரயில், முன்பு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்ட நேரத்திலேயே இயக்கப்படுகிறது. இந்த ரயிலை, சென்னையில் உள்ள யூனிட் ரயிலை போல் கூடுதலாக இயக்க கோரி, பயணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கையாக வைத்துள்ளனர்.